தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் திரு. சந்தீஸ் இ.கா.ப அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ஹென்சன் பால்ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் திரு. ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆகியோர் நேற்று (07.11.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சோதனை செய்ததில், அங்கு விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி தனிப்படை போலீசார் அந்த பெட்டிக்கடையின் உரிமையாளரான தூத்துக்குடி பிரூடி காலனி பகுதியைச் சேர்ந்த முத்துமாலை மகன் சுடலைகண்ணு (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 135 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.