கடலூர் : கடலூர் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி 134 பெண் காவலர்களுக்கான பயிற்சியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு M. ஸ்ரீ அபிநவ் IPS அவர்கள் துவக்கி வைத்து ,காவலர் குடும்பத்தில் புதிதாக சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நாட்டுக்கு நாடு காவல்துறை சீருடை, மற்றும் பயிற்சிகள் மாறுபட்டு இருந்தாலும், அனைத்து நாட்டு காவல்துறையில் முக்கியமாக கடைபிடிப்பது ஒழுக்கம் மட்டுமே. பயிற்சி காவலர்கள் கட்டாயம் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இவர்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகத்திற்கு மாஸ்க் அணிந்தும், கையுறை அணிந்தும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்