திண்டுக்கல்: தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன அதில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு விதிகளை மீறி அவசியமின்றி சுற்றித் திரிபவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது இந்நிலையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல்,பழனி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது விதிகளை மீறியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி அவசியமின்றி வெளியே சுற்றித் திரிந்த 850 பேர் மீதும், முகக்கவசம் அணியாத 392 பேர் மீதும், சமூக இடைவெளி கடைபிடிக்காத 54 பேர் மீதும் என ஒரே நாளில் 1,326 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.