கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் திரு.சுமித் சரண், IPS அவர்களின் உத்தரவின்படி, காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு. பாலாஜி சரவணன் அவர்களின் மேற்பார்வையில், மாநகர் தனிப்படை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், இணைந்து புலியகுளம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகள், மற்றும் குடோன்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் சண்முகா ஸ்டோர்ஸ் மற்றும் ஹரிஹரன் ஸ்டோர்ஸ் ஆகிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சுமார் 130 கிலோ அளவில் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் ரூபாய் 1.6 இலட்சம் ஆகும். மேலும் 2 உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப்படுகிறது. பகுப்பாய்வின் முடிவில் வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்