கோவை : மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடம் மூடப்பட்டது .இதனால் திருச்சி துறையூரில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தார். .அப்போது அதே ஊரை சேர்ந்த சேர்ந்த பூபதி மகன் கோபிநாத் ( வயது 22)என்பவருடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டது.பின்னர் சிறுமி மேட்டுப்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் கோபிநாத் மாணவியை தேடி அடிக்கடி மேட்டுப்பாளையம் வந்தார். அங்கு அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து துடியலூர்அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்புகார் செய்யபட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)