தென்காசி : தென்காசி மாவட்டம்,SV கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலபாட்டாகுறிச்சி, கிராமத்தை சேர்ந்த மாரிதுரை, முருகன் மற்றும் ஹரிஹரசுதன் ஆகியோருக்கு சொந்தமான ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான 26 சென்ட் நிலத்தின் பட்டாவில் அவர்களது தந்தையின் பெயரில், பிழையிருப்பதை அறிந்த எதிர் தரப்பினர் பெயர் பிழையை பயன்படுத்தி போலி பட்டா தயாரித்ததாக (19/04/2022), மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைந்துள்ள நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி. சந்திச்செல்வி, அவர்கள் துரிதமாக விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி பட்டா தயார் செய்து அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ், I.P.S, அவர்களின் முன்னிலையில் (26/07/2022) ஒப்படைக்கப்பட்டது. அபகரிக்கப்பட்ட நிலத்தை துரிதமாக விசாரணை மேற்கொண்டு உரிய நபரிடம் மீட்டுக் கொடுத்து வரும் நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.