கோவை : கோவை செல்வபுரம் தில்லை நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் அதேபகுதியில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அதேபகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் அந்த மாணவியின் வீட்டுக்குள் புகுந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவியின் தாய் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வங்கி ஊழியர் ராம்குமாரை போக்ஸோ சட்டத்தில் ஆர்.எஸ். புரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ராம்குமாரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்