தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டு காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் உத்தரவிட்டார்.
அதன்படி சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருள், அவர்கள் மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன், ஆகியோர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர், (20.09.2022) அதிகாலை பன்னம்பாறை சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த TN92 H2890 யமகா என்ற இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் சாத்தான்குளம் கட்டாரிமங்கலத்தைச் சேர்ந்த சின்னத்துரை மகன் கொடிமலர் (40), என்பதும் அவரிடம் ஸ்குரு டிரைவர், கட்டிங்பிளேயர் வைத்திருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 9 திருட்டு வழக்குகளிலும், நாசரேத் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளிலும், தட்டார்மடம் காவல் நிலையத்தில் 4 திருட்டு வழக்குகளிலும் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கிலும், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குளிலும் சம்பந்தப்பட்டவர் தெரியவந்தது. உடனயடியாக அவரை கைது செய்து அவரிடமிருந்த 126 பவுன் எடையுள்ள தங்க நகைகள், திருட்டு பணத்தில் வாங்கிய யமகா ஸ்கூட்டர், கலர் டிவி என மொத்தம் ரூபாய் 48,42,000/- மதிப்புள்ள சொத்துகளை மேற்படி தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து சொத்துக்களை பறிமுதல் செய்த சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருள், காவல் ஆய்வாளர் திரு. பாஸ்கரன், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. டேவிட் கிறிஸ்துராஜ், முதல் நிலைக் காவலர் திரு. சுதன், காவலர்கள் திரு. அகஸ்டின் உதயகுமார் மற்றும் திரு. அருண்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்