சேலம் : கடந்த (12/01/ 2020), ஆம் தேதி மேச்சேரி காவல் நிலைய சரகம் கொம்பன் புதூர் பொள்ளாச்சி வளவு சேச்சேரி பகுதியை சேர்ந்த சுகுணா மற்றும் முத்து என்பவரின் மகள் (12) வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த மதியழகன் (57), என்பவர் வீட்டில் இருந்து தனது தோழியை பார்க்கச் சென்று சிறுமியை வழிமறித்து பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் கொடுத்தனர்.
கொடுத்த புகாரின் மீது போக்சா ஆக்ட் 2012 படி வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில், இருந்தது இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி மதியழகன் (57), மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக (30 /08 /2022),-ம் தேதி மாண்புமிகு நீதிபதி திருமதி. ஜெயந்தி அவர்களால், ஏழு ஆண்டு சிறை தண்டனையும் ₹5000 அபராதமும் விதித்து திருப்பு வழங்கி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்