திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 12 வயது சிறுமி வீட்டில் தனியாக இருக்கும்போது அவரது வீட்டின் அருகே வேலை செய்து வரும் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த இம்தஸ் அலி (24) என்பவர் வீட்டில் யாரும் இல்லாதபோது சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே பெற்றோர் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜசேகர் அவர்கள் தீவிர விசாரணை செய்து மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இம்தஸ் அலி (24) என்பவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா