தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ், அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் செல்போன்கள் காணாமல் போனதாக தென்காசி மாவட்ட சைபர் பாளையம் காவல் நிலையத்தில் வந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தனராஜ் கணேஷ், அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் திருமதி.ஜோஸ்லின் அருள் செல்வி, அவர்கள் மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் அடங்கிய காவல்துறையினர் துரித நடவடிக்கையால் தொலைந்த மற்றும் தவறவிட்ட ரூபாய் 12 லட்சம் மதிப்பில் அணு 75 செல்போன்கள் மீட்கப்பட்டது. மேற்படி மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் (19/12/ 2022) ஆண்டு தென்காசியில் வைத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை தவறவிட்ட நபர்களுக்கு சைபர் கிரைம் குற்றங்களா, பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவியின் 1930 என்ற உதவி எண்ணை அணுக வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.