சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை உட்கோட்டை கல்லல் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய எஸ்.சசிகுமார் அவர்கள், பதவி ஏற்று 2 மாத காலத்தில் பொதுமக்களின் மனுக்களை பணிவுடன் பெற்று விரைந்து உடனுக்குடன் உடன் தீர்வு காணும் வகையில் சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய பிரபாகரன் தலைமையில் மனுக்களை விரைந்து தீர்வு கண்டு மற்றும் பொதுமக்களுக்கு சமூக சீர்திருத்த சிந்தனையுடனும் பொதுவுடமை உடனும் எப்படி வாழ வேண்டும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை சமுதாயத்தில் எப்படி நல்லபடி வளர்க்க வேண்டும் என்பதை பணிவுடன் பொதுமக்களுக்கு கல்லல் காவல் நிலைய ஆய்வாளர் மரியாதைக்குரிய எஸ்.சசிகுமார் அவர்கள் கனிவான முறையில் அறிவுறுத்தினார். குற்ற சம்பவங்களை குறைக்கும் வண்ணமாக குற்றங்களை இல்லாமல் அறவே ஒழித்திடும் எண்ணங்களோடு பொதுமக்களுக்கு நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் சமத்துவம் சகோதரத்துவம் பொதுவுடமை என்ற வாழ்வியலுடன் வாழ வேண்டும் என்பதை மிகவும் அன்புடன் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக கல்லல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேரோட்ட திருவிழாவில் இரண்டு தரப்பு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் படுகாயமூடன் மரணித்து விட்டார். உடனடியாக ஆறு குற்றவாளிகளை காவல் நிலைய ஆய்வாளர் எஸ்.சசிகுமார் அவர்கள் தலைமையில் சார்பு ஆய்வாளர் அவர்கள் முன்னிலையில் தலைமை காவலர் சுசைராஜ் உதவியுடன் மற்றும் காவல் ஆளுநர்கள் அனைவரும் குழுவாக ஒன்று சேர்ந்து குற்றவாளிகளை கைது செய் கைது செய்தனர். ஆறு குற்றவாளிகளை வெறும் 12 மணி நேரத்தில் கைது செய் கைது செய்தமைக்காக பொதுமக்களிடம் பெரும் பாராட்டும் மற்றும் வரவேற்பு பெற்றனர் கல்லல் காவல் துறையினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி