சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறும் சுற்றியுள்ள கிராம பகுதிகளான புதுவயல், அரியகுடி, கண்டனூர், போன்ற சுற்றியுள்ள காம பகுதிகளிலும் வார சந்தைகள் வெவ்வேறு கிழமைகளில் நடைபெறும் இதில் காய்கறி இறைச்சி போன்ற உணவு பொருட்களை வாங்க வரும் பொது மக்களை குறிவைத்து இருசக்கர வாகனங்களை கீரமங்கலத்தைச் சேர்ந்த பிரபல இருசக்கர வாகன திருடன் கண்ணன் தலைமையிலான ஐந்து பேர் கும்பல் திருடி சென்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் ஐந்தாயிரம் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்று உள்ளனர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதுவயல் சந்தையில் வங்கி ஊழியர் மனைவி காய்கறி வாங்க வந்திருந்த போது அவரது இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர் அப்போது கிடைத்த cctv காட்சிகளை வைத்து காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு cctv காட்சிகளை ஆய்வு செய்ததில் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்களத்தை சேர்ந்த கண்ணன் என்ன தெரிய வந்தது காரைக்குடி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர் ஸ்டாலின் ஐ.பி.எஸ், அவர்கள் தலைமையிலான காரைக்குடி உட்கோட்ட குற்றப்பிரிவு தனி படை சார்பு ஆய்வாளர் மரியாதைக்குரிய உதயகுமார் அவர்கள் மற்றும் மரியாதைக்குரிய திரு.பாலாஜி அவர்கள் திரு.சுரேஷ் குமார் அவர்கள் திரு முருகன் அவர்கள் திரு. பார்த்திபன் அவர்கள் சிவசங்கர் அவர்கள் திரு.முகமது சபி அவர்கள் மற்றும் திரு.சுரேஷ் கண்ணன் அவர்கள், மற்றும் ஏனைய காவல் ஆளுநர்கள் கண்ணனை கைது செய்து அதனை தொடர்ந்து அவரது கூட்டாளிகளான கணேசன், விஜய் ,மாரிமுத்து, சுந்தர் ,ஆகியோரை கைது செய்ததனிப்படை காவல்துறையினர் 12 மணி நேரத்தில் அவர்கள் பல்வேறு வார சந்தைகளில் திருடிய 45 இருசக்கர வாகனங்களை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு கிராமப் பகுதிகளில் மீட்டு உள்ளனர் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாகனத்தின் மதிப்பு 12 லட்சம் ரூபாய் ஆகும் குற்றவாளிகளை கைது செய்து 12 மணி நேரத்தில் 45 இரு சக்கர வாகனங்களை மீட்ட காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வாகனங்களை பறிகொடுத்தவர்கள் நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி