இராமநாதபுரம்: பாம்பன் குந்துகால் துறைமுகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி கொண்டு செல்ல இருந்த 8 நபர்களை காவல்துறையினா் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12கிலோ கஞ்சா, 8 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.