தமிழகத்தை சார்ந்த 12 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
- தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபி கரண் சின்ஹா
- தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக ஏ.கே.விஸ்வநாதன் . (சென்னை செயலாக்க பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்தவர் )
- சிவில் சப்ளை சிஐடி ஏடிஜிபி ஆக., ஆபாஷ்குமார்
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சீமா அகர்வால்
- அமலாக்கத்துறை ஏடிஜிபி – சந்தீப் ராய் ரத்தோர்
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி வன்னியபெருமாள்
- காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ்
- கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி.,யாக சந்தீப் மிட்டல்
- திருவள்ளூர் எஸ்.பி., ஆக வரூண் குமார்
ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், ஐஜி அந்தஸ்தில் இருந்த சங்கர், அமல்ராஜ், ஜெயராம் ஆகியோருக்கு ஏடிஜிபி., ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
பதவி உயர்வு
- போலீஸ் தலைமையகம் ஏடிஜிபி.,ஆக சங்கர்
- செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி., ஆக அமல்ராஜ்
- சமூக நலன் மற்றும் மனித உரிமைத்துறை ஏடிஜிபி ஆக ஜெயராம்.
ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.