சென்னை : சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் 1902 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் ஆணையாளராக இருந்த திரு. J.P. ஓஸ்வெல்டு ரூத் ஜோன்ஸ் எஸ்க் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட பழமையான கட்டிடம் ஆகும். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் பழமை மாறாமல் தற்போது புதுப்பிக்கப்பட்டு திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையாளர் அலுவலகமாக மாற்றப்பட்டது. இன்று 27.10.2020 காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் புதுப்பிக்கப்பட்ட திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலநது கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்