திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நகர வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிழக்கு ரத வீதியை சேர்ந்த கவிதா என்பவரின் வீட்டில் பீரோவை உடைத்து 145 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்களின் உத்தரவின்படி சி.சி.டிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 116 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு பாராட்டுகள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா