சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் மதுபிரியர்கள் கள்ளச்சாராயத்தை நாடியுள்ளனர், இதையறிந்த மர்ம நபரகள் கல்வராயன்மலை வனப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலமாக இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டு ஒரு லிட்டர் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது.
புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கல்வராயன்மலை வனப்பகுதியில் இருந்து முட்டல் வழியாக இருசக்கர வாகனத்தில் லாரி டியூப் மூலம் இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த கல்லூர் பகுதியை சேந்த மோளையன் மகன் குபேந்திரன் என்கிற கோபியை கைது செய்த ஆத்தூர் ஊரக தனிப்படை போலீசார் அவரிடமிருந்து 110 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.