கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ்., அவர்கள் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம் மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 12.01.2023-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட திருக்கோவிலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சிவச்சந்திரன் மற்றும் காவலர்கள் அம்மன்கொல்லைமெடு அருகே சுற்று காவல் பணியில் இருந்த போது சந்தேகத்துக்கு இடமாக வந்த TN 32 Y 6336 பதிவெண் கொண்ட லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது கரடிச்சித்தூர் கிராமத்தை சேர்ந்த 1.குமார் 27. த/பெ கந்தன், 2.கோபி 30. த/பெ குபேந்திரன் என்பவர்கள் கோழிப்பண்ணைக்கு லாரியில் சட்டவிரோதமாக சுமார் 1,600 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற குற்றவாளிகளை கைது செய்து கடத்திய ரேஷன் அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.