கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அவிநாசி ரோடு திருச்சி ரோடு மேட்டுப்பாளையம் ரோடு சத்தி ரோடு உள்ளிட்ட பிரதான சந்திப்புகளில் 70க்கும் மேற்பட்ட தானியங்கி சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில், பதிவாகும் காட்சிகள் காவல் கட்டுப்பாடு அறையில் (கண்ட்ரோல் ரூம்) உள்ள கணினி வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிக்னல்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
வட்டார பின்னர் வட்டாரபோக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வாகனங்களின் உரிமையாளர்களின் விவரங்கள் உடனடியாக கண்டறியப்படுகின்றன. இந்த ஆண்டு (2020) ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் 11 மாதங்களில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக ரூ 4 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கள் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை தடுக்கும் விதமாக இந்த அபராத நடவடிக்கைகள் கோவையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையிலிருந்து நமது நிருபர்
A. கோகுல்