பெரம்பலூர்: பெரம்பலூர் சாமியப்பா நகரைச் சேர்ந்தவர் புவமனம்மாதேவி(45).இவர் இன்று மதியம் தனது டூ வீலரில் பெரம்பலூர் முத்து நகர் அருகே சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து பைக்கில் சென்ற இரண்டு மர்ம நபர்கள் புவமனம்மாதேவி அணிந்திருந்த 11 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்