தருமபுரி: தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சுங்கசாவடி பகுதியில் தொப்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் சொகுசு பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது பேருந்தின் பின் இருக்கையில் மூட்டை மூட்டையாக 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பைலோச்சர் பிகாரா 25. புதாதீப்ரேவத் 27. என்பது தெரியவந்தது. இவர்கள் ஒடிசா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியது தெரிந்தது. இதையடுத்து 2 நபர்களையும் தொப்பூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 11 கிலோ கஞ்சாவை போலிசார் பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.