மதுரை : மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் கருப்பனகுமார் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார்
இந்த நிலையில், இன்று மாலை தனது வீட்டில் செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற முயன்றபோது எதிர்பாரதவிதமாக சுவிட்சில் மின்சாரம் பாய்ந்தது.
இதில், தூக்கிவீசப்பட்ட கருப்பனகுமார் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை குடும்பத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே, பரிதாபமாக மாணவர் கருப்பனகுமார் உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி மாணவர் இறப்பு குறித்து, பாலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி