காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருட்டு மற்றும் கொலை, கொள்ளை அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டதின் பேரில், மூன்று கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல சரித்திர பதிவேடு ரவுடி தணிகா (எ) தணிகைவேல்
பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம என்பவனையும், அவனது வலது கரமாக செயல்பட்டு வரும் கூட்டாளியான சரித்திர பதிவேடு ரவுடி வசா (எ) வசந்த், காஞ்சிபுரம் என்பவனும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திருப்பெரும்புதூர் உட்கோட்டம், சோமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி மேத்யூ, மணணடியம்மன் கோயில் தெரு, எருமையூர், இவர் ஏழு கொலை வழக்குகள் உட்பட 21 வழக்குகளில் சம்மந்தப்பட்டவரை காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுரம் அவர்களின் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டர்
தின்பேரில் மேற்படி பிரபல ரவுடிகள் அனைவரும் சிறையில் உள்ளனர். மேலும் இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 14 காவல் நிலையங்களில் கண்காணிக்கப்பட்டு வரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக காஞ்சி தாலுக்கா காவல் நிலைய பிரபல ரவுடி ராஜா (எ) வசூல் ராஜா, த/பெ.அலெக்ஸாண்டர், மாமல்லன்
நகர், காஞ்சிபுரம், மணிமங்கலம் காவல்நிலையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு ரவுடியான அருண் (எ) ஏம்பா அருண், த/பெ.கமலக்கண்ணன், கரசங்கால் கிராமம் உட்பட இவ்வாண்டில் மட்டும் 109 சரித்திர பதிவேடு ரவுடிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன் அவர்களில் 35 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர்