திண்டுக்கல்: கொரோனா காலத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்துச் செல்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இதனால் ஏராளமான 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குடும்பம் அனாதையாக நிற்கிறது. ஆதரவற்ற பல தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர்.
நத்தம் சாலை கோபால்பட்டியில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் 12 பேருக்கு நத்தம் காவல் ஆய்வாளர் ராஜ முரளி நிவாரண பொருட்கள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா