கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் போலீசார் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து அலுவலில் இருந்தபோது சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 10,640/- ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது. குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த நபரை கைது செய்து, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.