கோவை: கோவை மாநகர் பகுதிகளான ரத்தினபுரி சாய்பாபா காலனி சரவணம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு பெங்களூர் சென்று கார் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி வந்து இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கோவை மாநகர மத்திய சரகம் காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் அர்ஜுன் குமார் தலைமையிலான தனிப்படையினர் இன்று பெங்களூரில் இருந்து கோவைக்கு புகையிலை பொருட்களைக் கொண்டு வந்து விற்பனை செய்து வந்த நல்லாம்பாளையம் மற்றும் இரத்தினபுரி பகுதியை சேர்ந்த செல்வராஜ், சுரேஷ்குமார் மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 106 கிலோ அளவுள்ள புகையிலை பொருட்கள் மற்றும் பணம் 60500 ரூபாய் மற்றும் புகையிலைப் பொருட்களை கொண்டு வருவதற்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ, லேன்சர் ஆகிய இரு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு ரத்தினபுரி காவல் நிலையத்தில் cr no 803/21 u/s 24 1 cotpa act & 77 JJ act இன் படி வழக்கு பதிவு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
