சென்னை: ICICI வங்கியை சேர்ந்த திரு.E. பிரகாஷ் என்பவர் கொடுத்த புகாரில் DL Bottling Services ஐ சேர்ந்த நந்தகுமார், சண்முகம் மற்றும் அரி, மாதவன்ராம் (Sales Executive of ICICI Bank) ஆகியோர் போலியான ஆவணங்களை கொடுத்து தங்களுக்கும், தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் என 103 கிரெடிட் கார்டுகளை பெற்று உபயோகித்து ரூ .75 லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். 103 கிரெடிட் கார்டுகள் வாங்கிய நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் சண்முகம் ( 2 கார்டுகள் – ரூ -1,53,000/- ), அம்சா ( I கார்டு – ரூ -54,814/- ), சுந்தரராஜன் ( 2 கார்டுகள் – ரூ .65,789/- ), வேதாச்சலம் { 3 கிரெடிட் கார்டு – ரூ -2,17,000/- ) சிவா ( 2 கிரெடிட்கார்டு – ரூ.77,0000- ) மற்றும் தினேஷ் ஆகியோர் குரோம்பேட்டையில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என விண்ணப்பத்தில் இருந்தது.
21.06.2021 ம்தேதி எதிரி சண்முகம் விசாரணைக்கு ஆஜரானபோது மேற்படி அம்சா, வேதாசலம் மற்றும் சுந்தரராஜன் ஆகியோர் முறையே தனது அக்கா, மாமா மற்றும் சகோதரன் என்றும் அவர்களின் கிரெடிட் கார்டினை தான்தான் உபயோகித்து மோசடி செய்ததாகவும் அவர்களுக்கு சம்பந்தமில்லை என்று தெரிவித்து ஆஜர் செய்வதாக தெரிவித்தார்.
அதன்படி 22.06.2021 ம் தேதி மதியம் 1200 மணிக்கு திருமதி அம்சா (சண்முகத்தின் அக்கா), வேதாச்சலம் (மாமா) சுந்தர்ராஜன் (சகோதரன்) ஆகியோர் மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி பிரிவில் சண்முகம் ஆஜர் செய்தார்.
விசாரணையில் அவர்கள் சண்முகத்திடம் அடையாள அட்டையின் நகல் கொடுத்ததுதான் தெரியும் அதை கொண்டு கிரடிட் கார்டுகள் வாங்கி உபயோகித்தது தெரியாது என்று தெரிவித்தனர்.
விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்து அவர்களின் கையெழுத்திற்கு மாறுபட்டிருந்தது. ஆகவே முதலில் அம்சாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
மதிய உணவு முடித்து 2.30 மணிக்கு ஆஜரானவர்களில் வேதாச்சலத்தின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு கொண்டிருந்தபோது அவர் தண்ணீர் கேட்டவாறே மயங்கி விழுந்தார்.
உடன் அங்கிருந்த அவரின் மனைவி மற்றும் மைத்துனர்கள் அவருக்கு முதலுதவி அளித்ததுடன் உடனடியாக அவர்கள் வந்த ஆட்டோவிலேயே ஏற்றி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவனையில் அழைத்து செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.