மதுரை : மதுரை மாவட்டத்தில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் தாலுகா காவல் நிலையங்களில், மதுவிலக்கு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்கள், பிரிவு 14(4) மதுவிலக்கு சட்டம் 1937 பிரகாரம் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு தானியங்கி உதவி பொறியாளர் மற்றும் இயக்க ஊர்தி ஆய்வாளர் ஆகியோர்களை கொண்ட வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாக ஆய்வு செய்து, ஒவ்வொரு வாகனத்திற்கும் உரிய மதிப்பீடு செய்யப்பட்டது. இம்மதிப்பீட்டு பட்டியல் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் உத்தரவுப்படி (27/09/2022) ஆம் தேதி மதுரை மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் வைத்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . சிவபிரசாத் இகா.ப அவர்கள் முன்னிலையில், காலை 10:30 மணி முதல் 14 .00 மணி வரை பொது ஏலம் நடத்தப்பட்டது.
வாகனம் ஏலம் சம்பந்தமாக நாளேடுகள் மூலமாக பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டது. ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் கேட்ட 162 ஏலதாரர்களுக்கு 96 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 102 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. ஏலத் தொகையாக ரூபாய் 15,04,600 /- ம் GST வரியாக ரூபாய் 2,39,922/-ம் ஆக மொத்தம் ரூபாய் 17,44, 522/- ரூபாய் ஏலதாரர்களிடமிருந்து பெறப்பட்டது. இத்தொகை அரசு கணக்கில் செலுத்தப்படும் என்ற தகவலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவப்பிரசாத் இ.காப அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி