தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுக்கும் வண்ணம் அதனை விற்கும் மொத்த வியாபாரிகள் யார்,யார் என்று அவர்களை இனம் கண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி . ரவளிப் பிரியா ஐபிஎஸ் உத்தரவின் படி தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன், தலைமை காவலர் திரு.உமாசங்கர் மற்றும் காவலர்கள் அருண்மொழி, அழகு சுந்தரம், நவீன் மற்றும் சுஜித் ஆகியோர் அடங்கிய தஞ்சை சரக தனிப்படை போலீசார் தஞ்சை பகுதிகளுக்கு கஞ்சா எங்கிருந்து வருகிறது அதனை தஞ்சை மாவட்டத்திற்கு சப்ளை செய்பவர்கள் யார் யார் என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை புகைவண்டியில் (ரெயிலில்) கடத்தப்பட்டு திருச்சி, மதுரை வழியாக தஞ்சாவூர் வருவதாகவும் அது தற்போது தஞ்சை கொடிமரத்து மூலை அருகிலுள்ள ஒரு வீட்டில் வைத்து விற்பனை செய்வதாகவும் கடந்த இரு நாட்களுக்கு முன் தஞ்சை சரக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து நேற்று தஞ்சை அரண்மனை மேற்கு காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் கஞ்ச விற்பனை செய்து வரும் கும்பலை கைது செய்ய தனிபடை போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றார்கள். அப்போது அந்த வீட்டில் பதுங்கி இருந்த கஞ்சா வியாபாரிகளான பட்டுக்கோட்டை பாரதி நகரில் வசித்து வரும் கைலாசம் மகன் குமார்( 38), தஞ்சாவூர் நாஞ்சில் கோட்டைரோடு பகுதியில் வசிக்கும் சீதாராமன் மகன் பூமிநாதன்(58), வட மாநில ஒடிசாவை சேர்ந்த ரஞ்சித் மகன் ரன்ஜன்ஜன்(33), திருச்சி காந்தி மார்கட் பகுதியில் வசிக்கும் உக்கிரபாண்டி மகன் கௌதம் (24) ஆகிய நான்கு நபர்களையும், தஞ்சை சரக தனிபடை போலீசார் அதிரடியாக கைது செய்தார்கள். அதனை தொடர்ந்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார் 100- கிலோ கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றி (இதனின் மதிப்பு சுமார் இருபது லட்சம்) தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.