இராமநாதபுரம்: கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் உத்தரவுப்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 25.03.2020-ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்த நிலையில், தற்போது 24.05.2021-ம் தேதி முதல் 31.05.2021-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் லண்டன் நாட்டில் நொட்டிங்கம் தமிழ் பள்ளி நடத்தி வரும் தமிழகத்தைச் சேர்ந்த திரு.குணா அவர்களின் முன்னெடுப்பில் சென்னை ஷெனாய் நகர் புல்லா அவென்யுவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் முனைவர் திருமதி.கனகலட்சுமி அவர்கள், இராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளதுரை அவர்களின் முன்னிலையில் இராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 100 துப்புரவு தொழிலாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கினார்கள்.
மேற்கண்ட பொருட்களை வழங்கிய நன்கொடையாளர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.