சோழவந்தான் ஆலங்கொட்டாரத்தில் அரசன் சண்முகனார் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளி நூறாண்டுகள் கடந்து பழமை வாய்ந்த பள்ளியாகும். இங்கு அரசு உத்தரவின்படி பள்ளி ஆண்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாண்டி மீனா துணைத் தலைவர் கிராமத் தலைவர் சின்னச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் பள்ளி ஆசிரியை பணிமலர் வரவேற்றார். இப்பள்ளி முன்னாள் மாணவர் வர்த்தகர்கள் சங்க செயலாளர் ஆதி பெருமாள் ஆசிரியர்கள் சோமசுந்தரம் பிரியதர்ஷினி சாந்தி அனுப்பிரபா பெமினா அருண்குமார் ஆகியோர் பள்ளி வளர்ச்சி குறித்து பேசினார்கள் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பள்ளி கணினி ஆசிரியர் கார்த்திக்குமார் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சண்முகராஜா நன்றி தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி