தஞ்சை : தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பகுதிகளில் திருட்டு , வழிப்பறி , என பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை கைது செய்ய பாபநாசம் உட்கோட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்களின் உத்தரவுப்படி அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் திருமதி. வனிதா தலைமையில் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் , சிறப்பு உதவி ஆய்வாளர் முருகதாஸ் மற்றும் காவலர் வினோத், ஆகியோர் தீவிர கண்காணிப்பில் தேடுதல் வேட்டை மேற்கொண்டு வந்தார்கள் அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தஞ்சாவூர் பர்மா காலனியில் வசித்து வந்த கலியப்பெருமாள் மகன் அறிவழகன் (எ) அறவெட்டு (30), என்பவர் கடந்த பத்து வருடங்களாக திருட்டு,வழிபறி மற்றும் வீட்டு பூட்டை உடைத்து திருடுவது என பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர் இவர் மீது தஞ்சாவூர் , அய்யம்பேட்டை , வல்லம் மற்றும் பல ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ள அறிவழகன் என்கின்ற அறவெட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நாயக்கர்பட்டி என்ற கிராமத்தில் தலைமறைவாக இருந்து வருவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நாயக்கர்பட்டி கிராமத்திற்கு சென்ற போலீசார் சுமார் பத்து வருடமாக பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் கொள்ளையன் அறிவழகனை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்