திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றி சுமார் 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு பிரிவினர் கடலிலும், மற்றொரு பிரிவினர் பழவேற்காடு ஏரியிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அரங்கங்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள மீனவர்கள் பாரம்பரியமாக கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இன்று அதிகாலை அரங்கங்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்களின் வலைகள் பாதுகாக்கப்படும் இடத்தில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிவதை கண்ட அப்பகுதி மீனவர்கள் அலறியடித்தபடி சென்று தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். எனினும் மீன்பிடி வலைகள் அனைத்தும் முற்றிலும் ஆக எரிந்து நாசமானது. 10க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு சொந்தமான வலைகள் அந்த பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் முற்றிலும் ஆக எரிந்து நாசமாகி இருக்கிறது. சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இந்த தீ விபத்தில் சேதம் அடைந்திருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக யாரேனும் வலைகளுக்கு தீ வைத்தார்களா அல்லது மது போதையின் போது புகைப்பிடித்து வீசப்பட்டதால் இந்த தீ விபத்து நேர்ந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் மீனவர்களின் மீன்பிடி வலைகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு