கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி தமிழகத்தில் பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் மணிவேல் உள்பட 10 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.