திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில், சாராயம் விற்பனை செய்வதை அடியோடு தடுக்கவும், சாராயம் அற்ற மாவட்டமாக மாற்றவும் மாவட்ட போலீஸ் சூபிரண்டு திரு.பாலாகிருஷ்ணன், உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் சாராயம் விற்பவர்கள், காய்ச்சுபவர்கள் மற்றும் கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவதும் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த சாராயம் மற்றும் சாராய ஊறல் 10 ஆயிரம் லிட்டர் கைப்பற்றி அழிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.