சிவகங்கை : சிவகங்கை மாவடடம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2016 வருடம் மானாமதுரை ரயில்வே கேட்டில் பணிபுரிந்த ரயில்வே ஊழியர் வடமாநிலத்தைச் சேர்ந்த விபின்குமார் என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து அச்சிறுமி 05.11.2016 அன்று அளித்த புகாரின் பேரில் மானாமதுரை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 20.11.2020 அன்று விசாரணை முடிந்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.பாபுலால் அவர்கள் விபின்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி