திருப்பூர் : திருப்பூர் மாநகர அவிநாசி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக்(28) இவரை கடந்த 31-8-2010 அன்று திருப்பூரில் எம்எஸ் நகரில் வைத்து ஐந்து பேர் கொண்ட கும்பலால் தலையை துண்டாக வெட்டிக் கொலை செய்தனர்.
ரூபாய் முப்பதாயிரம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததால் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கார்த்திக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி சேர்ந்த மோகன்ராஜ்(32) என்பவர் உட்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பிறகு மோகன்ராஜ் கோர்ட்டில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன்பின் கோர்ட்டில் ஆஜராகாமல் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார்.இதனால் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் வடக்கு ஆய்வாளர் திரு.கணேசன் தலைமையிலான போலீசார் நேற்று திருப்பூரில் காந்திநகரில் வைத்து மோகன்ராஜ் என்பவரை கைது செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.இந்தச் செயலை செய்த ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய் குமார் (IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரி நாராயணன்(IPS) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.