தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், மதுக்கூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் வீடு புகுந்து ஆட்கள் இருக்கும் போது மற்றும் பூட்டியிருந்த வீட்டை உடைத்து , உறங்கிக் கொண்டிருக்கும் நபர்களிடம் தாலி சங்கிலியை அறுத்து செல்வது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்தவர்களை தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS அவர்களின் உத்தரவின்படி, பட்டுக்கோட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.புகழேந்தி கணேஷ் அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் (மதுக்கூர்), காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில் தலைமை காவலர் தனபால்,தலைமைக் காவலர் தினகரன், தலைமைக் காவலர் ராஜா, காவலர்கள் அருள் குமார், மருது, சரத்குமார், ( cyber crime) விஜய் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் போது பட்டுக்கோட்டை ( சிசிடிவி) வீடியோ மற்றும் சில ரகசிய தகவல் பல மாவட்டங்களில் கைரேகை அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்களை பற்றி தீவிர விசாரணையில் போது வல்லம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் நீலகண்டன் ஆகியோரை அதிரடியாக கைது செய்து 10க்கு மேல் திருட்டு வழக்குகளில் தொடர்பு இருந்தது தெரிய வந்து அவர்களிடம் இருந்து நகை பொருட்கள் பறிமுதல் செய்தும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்பு உடையவர்களை பற்றி மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா