திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியின் 3வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வை எதிர்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் வேலு தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் தங்கமணி முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மீஞ்சூர் பேரூராட்சி துணை தலைவர் அலெக்ஸாண்டர் கலந்து கொண்டு 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரவுள்ள நிலையில் மாணவர்கள் தேர்விற்கு எவ்வாறு தயாராவது என ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கினர். பயமின்றியும், பதட்டமின்றியும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும், அப்போது ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வினாத்தாள் பெற்றதும் அதனை முழுமையாக படித்து பார்க்க வேண்டும் எனவும், நன்கு பதில் தெரிந்த வினாக்களுக்கு முதல் விடையளிக்க வேண்டும் எனவும் அதற்கு பிறகு மற்ற வினாக்களுக்கு யோசித்து விடை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர் சுதாகர் அன்பரசு சுகுமார் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு