விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி பகுதியில், நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய நூலகம் கட்டப்பட உள்ளது. 1 கோடியே, 88 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும் நூலகத்திற்கு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசும்போது, அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் வசதிகளுக்காகவும், அரசு துறைகளின் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களின் பயன்பாட்டிற்காகவும் இந்தப்பகுதியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்படுகிறது. நூலக கட்டுமானப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, நூலகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி.சுந்தரலட்சுமி, துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் திரு.அசோக்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் திரு.சிவப்பிரகாசம், உட்பட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி