இராமநாதபுரம்: கொரானா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், IPS., அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு காவல்துறையினர் கொரோனா நோய் தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.முரளி செல்வம் (HC 1664) மற்றும் அவருடைய சகோதரர் திரு.விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து பாம்பன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 1,50,000 மதிப்பிலான 20 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி மற்றும் 400 முகக் கவசங்களை மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் திரு.பாக்கியநாதன், MBBS, மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் ஆகியோரிடம் வழங்கினார்கள்.
தலைமைக் காவலரின் இச்செயலை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.