திருப்பத்தூர்: கள்ளத்தனமாக சமூகவிரோதிகள் அதிகாரியின் கண்களில் மண்ணை தூவி விட்டு கடத்தல் நிகழ்வு நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை கோனேரிக்குப்பம் பகுதியை சேர்ந்த வெற்றி 43 இவர் தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கோனேரிக்குப்பம் பகுதியிலிருந்து சோமநாயாக்கன்பட்டி கேட் பகுதிக்கு ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்ததாக நாட்றம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் திரு.நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து திரு.நடராஜன் தலைமையில் பறக்கும் படை தாசில்தார் மற்றும் உதவியாளர் திரு.அருண் பாண்டியன் நாட்றம்பள்ளி தலைமை காவலர் ஆகியோர் 1.5. ரேஷன் அரிசியை கடத்தி வந்த டாட்டா ஏசி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட வெற்றியின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
அரிசியை திருப்பத்தூர் நுகர்வோர் வணிக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் போலீசாருக்கும் கடத்தலில் ஈடுபட்ட வெற்றி மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளி மாநிலத்திற்கு ஒன்றிய சமீபகாலமாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.