மதுரை: மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில், மதுரை மாவட்டத்தில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ரோந்து செய்து வந்தனர்.
பெருங்குடி, வலையங்குளம் கருப்பசாமி கோவில், அருப்புக்கோட்டை பிரிவு அருகே போலீசார் கண்காணித்து கொண்டிருந்த சூழ்நிலையில் அங்கே சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை, வாகன சோதனை செய்தபோது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள். 1, 32,250 ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.
மேற்படி தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை விற்பனைக்கு எடுத்து வந்த செந்தில்முருகன், மருதமலை, குமரன், அன்சாரி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்..
மேற்படி கைது செய்த நபர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் மற்றும் 90 அன்பளிப்பு பட்டாசு பெட்டிகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்து, பெருங்குடி காவல் நிலையத்தில் மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும், அதேபோன்று மதுரை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்த 12 நபர்களை போலீசார் கைது செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி