தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் போதை பொருள்களின் விற்பனையை தடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் படி
தஞ்சை தனிப்படை போலீசார்கள் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன், தலைமை காவலர் திரு.உமாசங்கர் மற்றும்
காவலர்கள் திரு.அருண்மொழி, திரு.அழகுசுந்தரம், திரு.நவீன், திரு.சுஜித் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார்கள் தினசரி தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த 12-11-21அன்று தனிப்படை போலீசாருக்கு தஞ்சை பகுதி வெள்ளைபிள்ளையார் கோவில் தெரு அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து தஞ்சை தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக அப்பகுதிக்கு சென்று அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த தஞ்சை கீழவாசல் இராவுத்தர் காலனியில் வசித்து வரும் அருள்ராஜ் மகன் ஸ்டாலின் 24. என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள்.
அவரின் பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார்கள் அதில் சுமார் 1 – 1/2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை தொடர்ந்து அதனை கைப்பற்றி அதனை வைத்திருந்த அந்த நபரை கைது செய்தார்கள்
பின்னர் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அந்நபரிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.