சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி காவல்நிலைய சரகம் பிச்சப்பிள்ளையேந்தல் என்ற கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை 29/01/2021 அன்று இரவு மர்மநபர்களால் கடையை உடைத்து சுமார் 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்தது சம்பந்தமாக திருப்பாச்சேத்தி காவல் நிலைய குற்ற எண் 31/2021 U/S 457,380 IPC வழக்கு பதியப்பட்டது.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு , ரோகித்நாதன் IPSஅவர்களின் உத்தரவின் பேரில்m தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் திரு. எர்சாத் , திரு, சபரிதாசன் , திரு. கோடீஸ்வரன் ஆகியோர்களின் மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையை சேர்ந்த சார்பு ஆய்வாளர் திரு. ரஞ்சித், முதல்நிலை நிலை காவலர்கள் திரு. சரவணன் , திரு. முத்துபாண்டி , திரு. காளீஸ்வரன் , மற்றும் ஆயுதப்படை காவலர் திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர்களால் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளான ராஜா (எ) ராஜதுரை 27, வன்னிமுத்து 27, ராஜா (எ) வீரபத்திரன் 31, வேலு 32, முத்துகிருஷ்ணன் 38, பிரகாஷ் 18, பாண்டி 20, பிரபுதேவா 26, அரவிந்சாமி 26
ஆகியோர்களை பிடித்தும், மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியது கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து 16 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.
இவ்வழக்கிற்கு திருப்பாச்சேத்தி காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் அசோக்குமார் மற்றும் CYBER CRIME SI திரு.சுரேந்தர்,மற்றும் காவலர்கள், பிரதீப், பாலா, சரவணன், பாலசுப்பிரமணியன், சாணக்கியன் ஆகியோர்கள் மிகவும் உதவினார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி