விருதுநகர்: சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.மலையரசி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பி.கே.என் சாலையில் உள்ள ஒரு வீட்டில், புகையிலை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
புகையிலை பொருட்கள் மூடைமூடையாக பதுக்கி வைத்திருந்த, திருமேனி நகரைச் சேர்ந்த அமல்ராஜ் 52 என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.