விருதுநகர்: பணகுடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வள்ளியூர் டானா பிரிவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது.
அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருமலாபுரம், இந்திரா காலனியை சேர்ந்த ஜெகன் மற்றும் மற்றோரு இருசக்கர வாகனத்தில் பழவூர் சேர்ந்த சோமன் 22, ஆகியோரது இருசக்கர வாகனத்தையும் நிறுத்தி சோதனை செய்ததில்.
சாக்குப் பையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேற்படி இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டதில்.
முப்பந்தல் பகுதி அருகே உள்ள அறையில் 90 கிலோ எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் காவல்துறையினர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.