திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த அபிராமி என்பவரின் மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 ந்தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையின் போது, மாணவி, ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. மாணவியின் கர்ப்பத்துக்கு காரணமானவர் யார்? என திருச்சி காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி