கடலூர் : கடலூர் துறைமுகம் காவல் நிலையம் சரகம் தைக்கால் தோணித்துறையில் வாதி முருகன் வயது 42, என்பவர் தனது மனைவி ஆனந்தியுடன் நேற்று மாலை 6 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த நேரத்தில் தனது வீட்டில் வளர்க்கும் மூன்று நாய்களுக்கு நாய்களுக்கு தனது நண்பரை பிஸ்கெட் போட அனுப்பி வைத்தார் அவரது நண்பர் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து திறந்த நிலையில் உள்ள தகவலை அவருடைய நண்பர் முலம் அறிந்து வந்து பார்த்தவுடன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவைத் திறந்து 6 பவுன் 2 கிராம் தங்க நகைகள், செல்போன் களவாடி சென்றுள்ளது தெரியவந்ததன் பேரில் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி K.சாந்தி அவர்களின் மேற்பர்வையில் உதவி ஆய்வாளர் திரு.ராஜாங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, புலன் விசாரணை மேற்கொண்டு சம்பவம் நடந்த 1 மணி நேரத்திலேயே பூட்டிய வீட்டை உடைத்து திருடிய மகேஷ் வயது 32, என்பவரை கைது செய்து களவாளப்பட்ட நகை மற்றும் பொருட்களை மீட்டனர். புகார் கொடுத்த 1 மணி நேரத்திலேயே குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளார் திரு.ம.ஸ்ரீ அபிநவ், இ.க.ப. அவர்கள் பாராட்டினார்.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்